பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு

பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.50 ஆக உயர்வு
X

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.10 ல் இருந்து ரூ. 50 ஆக இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் முன்பதிவு டிக்கெட் எடுத்த பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பயணிகளை வழியனுப்ப யாரும் அதிகப் படியான நபர்கள் உள்ளே வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழியனுப்ப ஏராளமானோர் வருகின்றனர். இத்தகைய நபர்கள் வருகையை குறைக்க பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை ரூ 10ல் இருந்து ரூ 50 ஆக அதிகரித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் இது நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் 4 ரயில் நிலையங்களில் முதலில் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம் ஜங்ஷன், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய நான்கு ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ. 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture