தாரை தப்பட்டையுடன் கொரோனா விழிப்புணர்வு; ரயில்வே போலீசார் நூதனம்
பயணிகளிடம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரயில்வே போலீசார்.
கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது நோய்த்தொற்று குறைந்து வருவதால் பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவை தொடங்கியுள்ளது.
இதையடுத்து சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சேலம் ரயில்வே காவல் துறையினர் சார்பில் தாரை தப்பட்டை அடித்து பயணிகளுக்கு முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கி நூதன விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதனதை்தொடர்ந்து பயணிகளுக்கு இலவச மரக்கன்றுகளை காவல் ஆய்வாளர் சிவகாமி வழங்கினார். பின்னர், அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பயணிகளிடம் கூறினார். காவலர்களின் இந்த விழிப்புணர்வு ரயில் பயணிகளை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu