சேலம் கோவிலுக்கு ரங்கசாமி வருகை- முதல்வராக பதவி ஏற்கும் முன்பு வழிபாடு

சேலம் கோவிலுக்கு ரங்கசாமி வருகை- முதல்வராக பதவி ஏற்கும் முன்பு வழிபாடு
X
புதுவை முதல்வராக பொறுப்பேற்கும் முன்பாக, சேலத்தில் அப்பா பைத்தியம் சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்த என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி, அமைச்சரவை பட்டியலை வழிபட்டார்.

புதுவை சட்டசபைக்கு நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், 16 சட்டமன்றத் தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. பெரும்பான்மை பலம் கிடைத்தத்டை அடுத்து, புதுச்சேரியில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, புதுச்சேரியின் முதலமைச்சராக நான்காவது முறையாக, என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் சேலம் சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலுக்கு இன்று வருகை தந்த ரங்கசாமி, தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழ் மற்றும் அமைச்சரவை பட்டியலை வைத்து வழிபாடு நடத்தினர்.

முன்னதாக, கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோவிலில் அன்னதானம் உட்கொண்டார். ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி, அப்பா பைத்தியம் சாமி கோவிலில், கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை வைத்து வழிப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!