சேலம் சிறைக்குள் நுழைய முயன்ற பியூஸ் மானுஸ் தடுத்து நிறுத்தம்

கோப்பு படம்
சேலத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக, சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது சிறை அதிகாரி செந்தில்குமார், பியூஸ் மானுஸ்யை தாக்கியதாக கூறப்படுகிறது. தன்னை தாக்கிய சிறை அதிகாரி செந்தில்குமார் மீது பியூஸ் மானுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, பியூஸ் மானுஷ் தாக்கிய விவகாரம் குறித்து மத்திய சிறை ஜெயிலர் மருதமுத்து தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்றை பியூஸ் மானுஷ் வெளியிட்டார். இதையடுத்து ஜெயிலர் மருதமுத்துவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சிறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். சில நாட்களில் மருதமுத்து காலமானார்.
இந்நிலையில், ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் சேலம் மத்திய சிறை அதிகாரியாக செந்தில்குமார் கடந்த மாதம் பொறுப்பேற்றார். இதையடுத்து, தன்னைத் தாக்கி ஐந்து வருடம் நிறைவடைந்த நிலையில் தன்னை அடித்து உயிருடன் வெளியில் விட்டதற்கு நன்றி தெரிவித்தும், இறந்த ஜெயிலர் மருதமுத்து விற்கு நீதி கேட்டும் பியூஸ் மானுஷ் இன்று சேலம் மத்திய சிறையில் நுழைய முயன்றதால் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu