இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்

இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்
X

இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்.

இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி இன்சூரன்ஸ் ஊழியர் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்.

மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அவர்கள் முன்னிலையில் பொது இன்சூரன்ஸ் துறையில் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் நான்கு ரோடு அருகே உள்ள யுனெடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள பொது இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். இன்சூரன்ஸ் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பினர் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். தென்மண்டல பொதுச் செயலாளர் சரசுராம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story