சேலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் நாளை ஒருநாள் நிறுத்தம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் நாளை ஒருநாள் நிறுத்தம்
X
பராமரிப்பு பணி காரணமாக, நாளை ஒருநாள், சேலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சேலம் மாநகராட்சி பகுதியில், தனிக்குடிநீர் திட்ட குடிநீர் விநியோகக் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவுகளை சரி செய்யும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக, நாளை (29.07.2021) வியாழக்கிழமை ஒருநாள் மட்டும், மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது . எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார் .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!