சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தடுப்பூசி குறித்து பயணிகளிடம் எம்எல்ஏ., விழிப்புணர்வு

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தடுப்பூசி குறித்து பயணிகளிடம் எம்எல்ஏ., விழிப்புணர்வு
X

கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ., அருள்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கு தொகுதி எம்எல்ஏ.,பயணிகளிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சேலம் மாவட்ட நிர்வாகம் நாளை மாவட்டம் முழுதும் 1356 இடங்களில் மூன்றாவது அலையை தடுப்பதற்காக மாபெரும் தடுப்பூசி முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விழிப்புணர்வை சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ., அருள் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடத்தில் நாளை நடைபெற இருக்கும் தடுப்பூசி முகாமினை அனைவரும் கட்டாயம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கோவாக்சின், கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை இலவசமாக செலுத்திக்கொள்ளுங்கள் எனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!