தனியார் பள்ளியை நிரந்தரமாக மூடப்போவதாக நிர்வாகம் தகவல். மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறி.

தனியார் பள்ளியை நிரந்தரமாக மூடப்போவதாக நிர்வாகம் தகவல். மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறி.
பெற்றோர்கள் பள்ளி முன்பு முற்றுகை போராட்டம்.

சேலம் அழகாபுரத்தில் இயங்கிவந்த தனியார் பள்ளியை நிரந்தரமாக மூடப்போவதாக நிர்வாகம் தகவல். இந்த முடிவால் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் பள்ளி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்


நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் புது உச்சத்தை எட்டி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.

பொருளாதார நெருக்கடியில் பள்ளிக்கட்டணத்தை முழுமையாக கட்ட முடியாத சூழ்நிலையில் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். இதனிடையே பல பள்ளிகள் பணியாளர்களுக்கு சம்பளம் கூட தர முடியாமல் நிரந்தரமாக பள்ளியை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சேலம் அழகாபுரம் பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளி, நிரந்தரமாக மூடப்போவதாக நிர்வாகம் பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை சந்திக்க இன்று பள்ளிக்கு வருகை தந்தனர். ஆனால் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளியில் இல்லை. தொலைப்பேசியிலும் சரியான விளக்கம் தராததால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தின் இந்த முடிவால் மாணவ மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பள்ளி முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story