ஊரடங்கிலும் 'அடங்காதவர்கள்'... கட்டுப்படுத்த முடியாமல் சேலம் போலீசார் திணறல்

ஊரடங்கிலும் அடங்காதவர்கள்...  கட்டுப்படுத்த முடியாமல் சேலம் போலீசார் திணறல்
X

சேலம் மாநகரில் ஊரடங்கை மீறி வெளியே திரியும் வாகன ஓட்டிகளை, விசாரித்து எச்சரித்து அனுப்பும் போலீசார். 

சேலம் மாநகரில், ஊரடங்கை மீறி உலா வரும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதையடுத்து, சேலம் மாநகரம் உள்பட, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில், போலீசார் தடுப்புகள் அமைத்து 24 மணி நேரமும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், ஊரடங்கை மீறி, ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி, பலரும் வெளியே வருகின்றனர். அத்தையக நபர்களை பிடித்து விசாரித்து, உரிய காரணங்கள் இருந்தால் விடுவிப்பதும், தேவையின்றி திரிவது தெரிந்தால் அபராதம் விதிப்பதோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாநகர பகுதிகளில் ஊரடங்கை மீறி பலரும், பிரதான சாலைகளில் உலா வந்து கொண்டே இருக்கிறார்கள். போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டாலும், கொரோனா பரிசோதனை, தடுப்பூசி, மருத்துவமனை, உணவகங்களுக்கு செல்வதாகக்கூறி, போலீசாரை ஏமாற்றி சாலைகளில் சுற்றித் திரிவது தொடர்கதையாகவே உள்ளது.

இதன் எதிரொலியால், முழு ஊடங்குக்கு முன்னால் ஒருநாள் பாதிப்பு 600, 700 ஆக இருந்தது தற்போது இருமடங்காக உயர்ந்து, 1200 முதல் 1500 வரை அதிகரித்துள்ளது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஊரடங்கை மேலும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு எடுக்கும் முயற்சிக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் நோய் பரவலுக்கு தீர்வே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

Tags

Next Story
அடுத்த புது மொபைல் வந்துருச்சு இத பாருங்க !!ரியல்மி 14X மொபைல் வரப்போகுது!