ஊரடங்கால் வீடுகளில் எளிமையாக ரமலான் தொழுகை
கொரோனா வைரஸ் பரவல் தாக்கம் உலகளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைகட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரம்ஜான் பண்டிகையை இன்று முஸ்லிம்கள் மிக எளிமையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
பள்ளிவாசல் மற்றும் முக்கிய இடங்களுக்கு செல்லாமல் தங்களது வீடுகளில் நெருங்கிய உறவினர்களுடன் குறைவான எண்ணிக்கையில் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் பகுதியில் முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலும், வீட்டின் மொட்டை மாடிகளிலும் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர். முக கவசம் அணிந்தவாறு சமூக இடைவெளியுடன் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரசிலிருந்து மக்கள் விரைவில் விடுபட வேண்டும். கொரோனா வைரஸ் பாதித்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டியும் இந்த ரம்ஜான் பண்டிகை நாளில் சிறப்பு பிரார்த்தனை செய்தோம் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu