கணவனை இழந்த சோகத்தில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

கணவனை இழந்த சோகத்தில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்துகொண்ட பாட்டி அன்னம்மாள்.

சேலம் சூரமங்கலம் பகுதியில் கணவனை இழந்த சோகத்தில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பழைய சூரமங்கலம் வெள்ளைய கவுண்டர் தெருவை சேர்ந்தவர் பெரியண்ணன். 98 வயதான இவர் ஒரு மாடு வைத்து பால் வியாபாரம் பார்த்து வந்தார். வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருந்துள்ளார். இவரது மனைவி அன்னம்மாள்(85) பால் விற்பனை செய்து கொண்டு கணவனையும் கவனித்து வந்துள்ளார். இவர்களுக்கு 3 மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். மருமகள்களும் அவர்களது தாய் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்நிலையில், பெரியண்ணன் நேற்று இரவு உடல் நலக்குறைவால் காலமானார். இதனை அறிந்த அன்னம்மாள் தான் அனாதையாக்கப்பட்டாக உணர்ந்து வீட்டின் முற்றத்தில் தனது சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அருகில் உள்ள அவர்களது உறவினர் ராஜு என்பவர் வந்து பார்த்தபோது இரண்டுபேரும் இறந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்படவே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்னம்மாளின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் இறந்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!