சேலம் மாநகராட்சியில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்
சேலம் மாநகராட்சி
சேலம்மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மாமாங்கம், புதுத்தெரு, திருவாக்கவுண்டனூர் மாரியம்மன் கோவில் தெரு, சுந்தரம் காலனி, நியூ பேர்லேண்ட்ஸ் 5வது குறுக்குத் தெரு, ஜட்ஸ் ரோடு, மரவனேரி, குமாரசாமி தெரு, கொய்யாத்தோப்பு, முத்துவல்லி யாகுது தெரு, அங்காலம்மன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும்,
பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை ரெட்டியூர் ஏரிக்கரை ரோடு, தர்ம நகர், மொரம்பு காடு, சையத் அலித் தெரு, பெரிய புதூர் பிள்ளையார் கோவில் தெரு, வசந்த புரம், பெரமனூர் கிழக்கு, பங்களா தெரு,கோபால் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.
மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை ஜாகீர் அம்மாபாளையம் எட்டுக்குட்டை தெரு, சோளம்பள்ளம் மாரியம்மன் கோவில், போடிநாயக்கன் பட்டி, இரத்தினசாமிபுரம், சுவர்ணபுரி, மோகன் நகர், கோவிந்தக் கவுண்டர் தோட்டம், அண்ணா நகர், வரதையர் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும்.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu