சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்
சேலம் மாநகராட்சி அலுவலகம்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் .
சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கிழக்கு ரெயில்வே காலனி, காசக்காரனூர், ராமசாமி நகர், கபினி தெரு, காட்டூர், சின்ன கொல்லப்பட்டி, சங்கர் நகர், தேவாங்கபுரம், வாய்க்கால்பட்டறை காந்தி நகர், அரசமர பிள்ளையார் கோவில் தெரு, ஜோதி டாக்கீஸ் கிழக்கு தெரு, ஆரப்ப கந்தசாமி தெரு, புலிகுத்தி தெரு, பாஞ்சாலை நகர், சென்றாயன் தெரு, காமராஜர் நகர், ஆகிய பகுதிகளிலும், பிற்பகல் 12.00 மணி முதல் 2.00 மணி வரை தலையில்லா பிள்ளையார் கோவில் தெரு, அந்தோணிபுரம், குடுமியான் தெரு, கோரிகாடு, மதுரா கார்டன், ஆத்துக்காடு, காந்தி ரோடு, வசலு தெரு, தாண்டவர் நகர், குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு, நஞ்சம்பட்டி, வித்யா நகர், மூங்கப்பாடி தெரு, பழனியப்பா காலனி, கல்டிப்போ தெரு, பாரதி நகர் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.
மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை சன்னதி தெரு,சின்னேரிவயல்காடு, பெரியார் தெரு, ரத்தினசாமிபுரம், ஸ்வர்ணபுரி, கோகுல் நகர், நாராயணபிள்ளை தெரு, பழைய மார்க்கெட், தில்லை நகர், காளிகவுண்டர் காடு, மேட்டு தெரு, அண்ணா நகர், லோகி செட்டி தெரு, முனியப்பன் கோவில் தெரு, கலைஞர் நகர்,திருவள்ளுவர் நகர்உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்றும், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu