சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கும் இடம்

சேலம் மாநகராட்சியில் இன்று  காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்கும் இடம்
X

மாநகராட்சி அலுவலகம் ( பைல் படம்)

சேலத்தில் இன்று காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மாமாங்கம், மாரியம்மன் கோவில் தெரு, சிவதாபுரம் மாரியம்மன் கோவில் தெரு,வசக்காட்டு காலனி, பேர்லேண்ட்ஸ், அய்யந்திருமாளிகை வள்ளலார் நகர், ஜான்சன்பேட்டை மேற்கு, சுவர்ணம்பிகை தெரு, அண்ணா நகர், வால்மிகீ தெரு, பாரதியார் தெரு, பழைய பிள்ளையார் கோவில் தெரு, தாமோதரன் தெரு, கண்ணகி தெரு, வள்ளுவர் நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளிலும்,

பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை பொன் நகர், இந்திரா நகர், செட்டியார் தோட்டம், மெய்யனூர் மெயின்ரோடு, பெரியபுதுார், கன்னங்குறிச்சி மெயின்ரோடு, சங்கர் நகர் மற்றும் சின்ன கிருஷ்ணப்பா தெரு, கன்னாரத் தெரு, வாசக சாலை, ஹவுசிங் போர்டு குறிஞ்சி நகர், பிடாரி அம்மன் கோவில் தெரு, வித்யா நகர், பென்சன் லைன் வடக்கு தெரு, கே.பி.கரடு, தொட்டனச் செட்டிக்காடு, எருமாபாளையம் மெயின்ரோடு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை ஜாகீர் அம்மாபாளையம் காமராஜர் தெரு, அந்தோணிபுரம், டி.எம்.ரோடு, சின்னப்பன் தெரு, போயர் தெரு, ராஜா நகர், பெரமனூர் நாராயணன் பிள்ளை தெரு, வெங்கடசாமி தெரு, காமராஜர் காலனி, டாக்டர் வரதராஜன் தெரு, ஓந்தப்பிள்ளைக்காடு, ராகவேந்திர தெரு, ராமகிருஷ்ணா ரோடு, ரங்கதாஸ் தெரு, செல்லக்குட்டிக்காடு ஜவகர்லால் தெரு, பெருமாள் கோவில் மேடு 3வது கிராஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்றும்,

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil