சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறும் இடங்கள்

சேலம் மாநகராட்சியில் இன்று  காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறும் இடங்கள்
X
சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறுகின்றன. அதன்படி, இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மாமாங்கம், வி.எம்.ஆர் நகர், கள்ளர்காடு, சையத் காதர் தெரு, பேர்லேண்டஸ், எம்.டி.எஸ் நகர், ராஜா ராம் நகர், வைத்தி தெரு, இரயில்வே லைன் மேற்கு, மேட்டு மக்கான் தெரு, பாலாஜி நகர், வையாபுரி தெரு, எஸ்.எம்.சி லைன், காளியம்மன் கோவில் தெரு, வேலுத் தெரு, மேட்டு தெரு ஆகிய பகுதிகளில் முகாம் நடக்கிறது.

அதேபோல், பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை டவுன் பிளானிங் நகர், தர்மா நகர், எம்.ஜி.ஆர் நகர், துரைசாமி நகர், அர்த்தனாரி கவுண்டர் தெரு, டி.வி.எஸ் காலனி, ராஜாஜி ரோடு, நந்தவனம் தெரு, குப்பு தெரு, நாராயண நகர் 4வது குறுக்குத் தெரு, நஞ்சம்பட்டி, அசோக் நகர், பிள்ளையார் கோவில் தெரு, முனியப்பன் கோவில் தெரு, களரம்பட்டி 2வது குறுக்குத் தெரு, பாரதி நகர் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை அண்ணா நகர், பெரியேரி வயல்காடு, போடிநாயக்கன்பட்டி, அரிசிப்பாளையம், பிருந்தாவன ரோடு, ராமநாதபுரம், நாராயண பிள்ளை ரோடு, அண்ணா நகர், முராரி வரதையர் தெரு, ராஜாபிள்ளைக்காடு, அருணாச்சலம் தெரு, பச்சையம்மன் நகர், ரங்கசாமி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும்.

காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!