சேலம் மாநகராட்சியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறும் இடங்கள்

சேலம் மாநகராட்சியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறும் இடங்கள்
X
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மாமாங்கம், காதர்கான் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, அந்தோணிசாமி தெரு, நியூ பேர்லேண்ட்ஸ், ஆத்துக்காடு, நேதாஜி நகர், பார்க் தெரு, சக்தி நகர், காமராஜர் தெரு, மார்க்கெட் தெரு, குமாரமுத்துசாமி தெரு, புலிக்குத்தி தெரு, அகரம் காலனி, சென்றாயன் தெரு, காமராஜ் நகர் ஆகிய பகுதிகளிலும், பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை அவ்வை நகர், லட்சுமி நகர், சொட்டையன் தெரு, துரைசாமி நகர், மதுரா கார்டன், காந்தி நகர், ராஜாஜி ரோடு, அப்புச்செட்டி தெரு, பெண்ணாடம் ராமசாமி தெரு, வால்மிகி தெரு, குருநாதர் காடு தெரு, கிருஷ்ணா நகர், முனியப்பன் கோவில் தெரு, கே.பி.காடு, வடக்கு முனியப்பன் கோவில் தெரு, மூணாங்கரடு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை ஜாகீர் அம்மாப்பாளையம் கண்ணகி தெரு, பிள்ளையார் நகர், ஆண்டிப்பட்டி, போலீஸ் பேட்ரோல் ரோடு, மலையன் காடு, மோகன் நகர், கோவிந்த கவுண்டர் தோட்டம், துபால் அகமது தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, சத்தியமூர்த்தி தெரு, ஓந்தாப்பிள்ளைக்காடு, பாவடி தெரு, ஆண்டிப்பட்டி ஏரி காலனி, மேட்டு வள்ளாலர் தெரு, பெரியார் குடியிருப்பு, செல்லக்குட்டிக்காடு கொத்தடிமை காலனிஉள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும்.

காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!