சேலம் மாநகராட்சியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறும் இடங்கள்

சேலம் மாநகராட்சியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறும் இடங்கள்
X
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சியில், கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில், நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வகையிஒ, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல், 12.00 மணி வரை மாமாங்கம் அண்ணாநகர், கார்கான தெரு, வசந்தம் நகர், சையத் காதர் தெரு, ஓட்டன்காடு, கோரிமேடு, நேதாஜி நகர், வைத்தி தெரு, அல்லிக்குட்டை, கோவிந்தன் தெரு, ஜோதி மெயின் ரோடு, சவுண்டம்மன் கோவில் தெரு, எஸ்.என்.சி லைன், சாஸ்த்திரி நகர், வேலு தெரு, மேட்டுத் தெரு - 2ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது.

இன்று பிற்பகல் 12.00 மணி முதல், 2.00 மணி வரை கனரா பேங்க் காலனி, அம்மாப்பாளையம் மெயின் ரோடு,சுந்தரம் காலனி, அருண் நகர், திருநகர், ராமகிருஷ்ணா ரோடு, எஸ்.வி.கே. தெரு, புத்துமாரியம்மன் கோவில் தெரு, ராமசாமி செட்டி தெரு, பருத்தி முதலியார் தெரு, கிருஷ்ணா நகர், கரி மார்க்கெட் தெரு, புட்டாமிசின் ரோடு, கருங்கல்பட்டி - 4, புரட்சி நகர் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

அதேபோல், இன்று நண்பகல் 3.00 மணி முதல், 5.00 மணி வரை அண்ணா நகர், அங்கமாள் காலனி, பிருந்தாவனம் ரோடு, செயிண்ட்மேரிஸ் கான்வென்ட், சின்னப்பா தெரு, ராமநாதபுரம், ஹவுசிங் யூனிட், அண்ணா நகர், மாரியம்மன் கோவில் தெரு, தியாகி நடேசன் தெரு, வ.உ.சி நகர், அம்பேத்கர் தெரு, சீரங்கன்தெரு, பாண்டு ரங்கன் எக்ஸ்டன்சன், பராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் என, மொத்தம் 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது என, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!