சேலத்தில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்

சேலத்தில் இன்று  காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்
X
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிப்பு

சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ரெட்டிப்பட்டி, ஸ்டேட் பேங்க் காலனி, சிவதாபுரம், கபினி தெரு, அண்ணாசாலை சுவர்ணபுரி, பாரதி நகர், மணக்காடு தெற்கு தெரு, வைத்தி தெரு, மாடர்ன் பில்டர்ஸ் காலனி, ஜமியா மஜித், ராஜாகணபதி தெரு, வையபுரி தெரு, புலிக்குத்தி தெரு, ராம்பிள்ளை தெரு, புதிய திருச்சி ரோடு, காமராஜ் நகர் ஆகிய பகுதிகளிலும்,

பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை இந்திராணி நகர், கபிலர் தெரு, கிழக்கு திருவாகவுண்டனூர் ராமசாமி நகர், வி.எம்.ஆர் நகர், மிட்டாபுதூர் என்.ஜி.ஜி.ஓ காலனி, அசோக் நகர், சீரங்கபாளையம், அவ்வையார் தெரு, குமரன் நகர், புத்துமாரியம்மன் கோவில், முத்துவள்ளி யாகூப் தெரு, கந்தசாமி தெரு, ராமலிங்கம் தெரு, மூங்கபாடிதெரு, அன்னதானபட்டிஅண்ணாநகர், கருங்கல்பட்டி கல்டிப்போ தெரு, மூணாங்கரடு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை ஜாகீர் அம்மாபாளையம் மாரியம்மன் கோவில் தெரு, பெரியேரி வயல்காடு, போடிநாயக்கன் பட்டி, வெள்ளைசாமி தெரு, சுவர்ணபுரி, ஐயந்திருமாளிகை வள்ளலார் தெரு, நாராயணபிள்ளை தெரு, கனகராஜ் கணபதி தெரு, காந்திமகான் தெரு, இளந்தோப்பு தெரு, கோவில் தெரு, பாரதியார் நகர், கொண்டலாம்பட்டி சீரங்கன் தெரு, பாண்டுரங்கான் விட்டால், செல்லகுட்டி காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil