/* */

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும்..!

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை 40 க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும்..!
X

சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்

சேலம் மாநகராட்சியில் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஜாகீர் அம்மாபாளையம் அண்ணா நகர், ஆசாத் நகர், ஆண்டிப்பட்டி, அரிசிப்பாளையம் மெயின் ரோடு, தென் அழகாபுரம், சின்னக் கொல்லப்பட்டி ஜீவா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், பிற்பகல் 11.00 முதல் 1.00 மணி வரை ரெட்டியூர் பெருமாள் அடிவாரம், அரியாகவுண்டம்பட்டி, மெய்யன் தெரு, பள்ளப்பட்டி விநாயக கார்டன், ஏ.டி.சி.நகர், மகேந்திரபுரி, சேகர் தெரு, செவ்வாய்பேட்டை கண்ணார தெரு, வாசகி சாலை, சத்திய மூர்த்தி தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும்,

மேலும், நண்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை காமநாயக்கன்பட்டி, ஜெயா நகர், சொட்டையன் தெரு, சின்ன எழுத்துக்காரர் தெரு, ஆலமரக்காடு,அய்யந்திருமாளிகை, நாராயண பிள்ளை தெரு,உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என நாளை 40க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் என்றும், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 19 Jun 2021 2:16 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  4. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  5. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  6. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  7. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  8. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா