சேலம் மாநகராட்சியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்குமிடங்கள்

சேலம் மாநகராட்சியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்குமிடங்கள்
X
சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் வருமாறு:

சேலம் மாநகராட்சி பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மாமாங்கம், காசகாரனூர், மெய்யன் தெரு, கபினி தெரு, சாரல் வில்லேஜ், அய்யந்திருமாளிகை, ஜான்சன்பேட்டை மேற்கு, அருணாச்சலம் தெரு, புது காலனி,சின்ன கடை வீதி, கார்பெட் தெரு, பச்சப்பட்டி மெயின்ரோடு, புலிகுத்தி தெரு,அன்னதானப்பட்டி அண்ணா நகர், தார்ப்பாய்க்காடு, குமரன் நகர் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிரது.

இன்று பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை சிவாய நகர், சோளம்பள்ளம், பழனியப்பா நகர், வி.எம்.ஆர்.நகர், சக்தி நகர், காந்தி நகர், காந்தி ரோடு, எ.வி.ஐயர் தெரு, பெருமாள் கோவில் தெரு, வால்மீகி தெரு, எல்லப்பன் தெரு, ராமசுந்தரம் தெரு, சாமுண்டி தெரு, புட்டா மெசின் ரோடு, களரம்பட்டி 3வது குறுக்கு தெரு, மூணாங்கரடு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை ஜாகீர் அம்மாபாளையம் விஜயராகவன் நகர், கந்தம்பட்டி, மஜித் தெரு, நரசிம்மன் தெரு, பேர்லேண்ட்ஸ், அன்பு நகர், நாராயணன் பிள்ளை தெரு, துபால் அகமது தெரு, முராரி வரதையர் தெரு, ஹவுசிங் போர்டு குறிஞ்சி நகர், செல்வம் நகர், அண்ணா நகர், நெய்மண்டி அருணாச்சலம் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ராஜூவ் காந்தி தெரு, போலீஸ்காரன் காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என, மொத்தம் 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறுகிறது. இதனை, பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!