அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? மாஜி அமைச்சர் வளர்மதி தகவல்
X
By - T.Hashvanth, Reporter |4 May 2021 2:15 PM IST
அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, முன்னாள் அமைச்சர் வளர்மதி பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுற்ற நிலையில், இதுவரை எதிர்க்கட்சியாக இருந்து வந்த திமுக, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. ஆளுங்கட்சி வரிசையில் இருந்த அதிமுக, தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளது.
அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி நிலவி வருகிறது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை, சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள அவருடைய இல்லத்தில், வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள்,அதிமுக வேட்பாளர்கள், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சந்தித்து வருகின்றனர்.
அவ்வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி,ஆர்.பி.உதயகுமார் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.
பின்னர், சேலத்தில் செய்தியாளர்களுக்கு வளர்மதியில் கூறியதாவது: சட்டமன்றத் தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை, கட்சியே முடிவு செய்யும். அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை எதிர்கட்சி தலைவரை தேர்வு செய்வதுதான்.
அரசியிலில் வெற்றி தோல்வி மாறி மாறி வருவது சகஜம்; அதுதான் தேர்தல். 1972 ஆவது ஆண்டில் இருந்து வெற்றி தோல்விகளை சந்தித்து பழக்கப்பட்டவர்களே அதிமுகவினர்.கழக இணை ஒருங்கிணைப்பாளரின் ஆளுமையை நிரூபிக்கும் வகையில் இந்த தேர்தல் அமைந்தது. அவருடைய அயராது உழைப்புதான் வெற்றிக்கு காரணம். புதியதாக அமையவுள்ள அரசின் நடவடிக்கைகளை பொருத்திருந்து பார்த்துதான், அதுபற்றி கருத்து சொல்ல முடியும் என்றார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu