சேலம்: துயரில் இருந்தவருக்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்!
சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் வெற்றிவேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு தொடர்பு கொண்டு "என்னோடு பணியாற்றும் வழக்கறிஞரான ஜான் அவர்களின் தாய் டெய்சிரோஸ்லின் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவர்களை அடக்கம் செய்ய உதவ வேண்டும்" என்றார்.
இதனையடுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் வடக்கு மாநகர நிர்வாகிகளிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர செயலாளர் பிரவீன் குமார் தகவல் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் மாநகர செயலாளர் குரு பிரசன்னா, மாநகர பொருளாளர் மனோகரன், மாநகர துணைத்தலைவர்கள் கதிர்வேல், சசிக்குமார் ஆகியோர் பாதுகாப்பு உடை (PPE கிட்) அணிந்து சென்றனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து, ஜங்சன் ரயில்நிலையம் RMS அருகில் உள்ள கிருத்துவ மயானத்திற்கு வாகனம் மூலம் எடுத்து சென்று, உடலை அடக்கம் செய்தனர். வாலிபர் சங்கத்தினர் சற்றும் தயங்காமல், இறந்தவர்களின் உடலை கையாண்டு அடக்கம் செய்தனர்.
இந்த இரண்டாம் அலை தொற்றுகாலத்தில் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 16 உடல்களை, அவர்கள் அடக்கம் செய்துள்ளனர். இந்த இளைஞர்கள் துணிச்சலாகவும், பாதுகாப்பாகவும், ஒருமாத காலமாக தொடர்ந்து உதவிகரம் நீட்டி வரும் ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்களுக்கு, பொதுமக்களின் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu