மருத்துவர்களை தாக்குவதா? சேலத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவர்களை தாக்குவதா?  சேலத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள்  ஆர்ப்பாட்டம்
X

மருத்துவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து,  சேலத்தில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, சேலத்தில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா நோய் பெருந்தொற்று காலத்தில், நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். எனினும், நாடு முழுவதும் ஆங்காங்கே மருத்துவர்கள் தாக்கப்படும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இதனை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில், நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றி வருகின்றனர்.

அதன்படி, சேலம் 5 ரோடு அருகே உள்ள இந்திய மருத்துவச்சங்க அலுவலகம் வளாகத்தில் மருத்துவர்கள், 50 க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை வலுபடுத்த வேண்டும், மருத்துவர்களை தாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க புதிய ஷரத்து கொண்டுவர வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்