கொரோனா டிரைவ்-இன் ஆர்டி- பிசிஆர் பரிசோதனை மையம் சேலத்தில் துவக்கி வைப்பு

கொரோனா  டிரைவ்-இன் ஆர்டி- பிசிஆர் பரிசோதனை மையம் சேலத்தில் துவக்கி வைப்பு
X
சேலத்தில், தற்காலிக டிரைவ்-இன் ஆர்டி- பிசிஆர் பரிசோதனை சிறப்பு மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சி பகுதியில் நாளுக்குநாள் கொரோனோ தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரானா தடுப்பூசி போடப்பட்டு வருவதோடு 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீடு வீடாக சென்று வீட்டில் உள்ளவர்களுக்கு சளி காய்ச்சல் போன்ற தொற்று உள்ளதா என கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது .

இதன் ஒருபகுதியாக சேலம் மாநகராட்சி பகுதியில் வாகன ஓட்டிகள் வாகனங்களில் இருந்தே சளி தடவல் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் தற்காலிக டிரைவ்-இன் ஆர்டி- பிசிஆர் பரிசோதனைமையம் துவக்க ப்பட்டுள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தினை, மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். இந்த சிறப்பு முகாமின் மூலம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தினந்தோறும் 500 பேருக்கு சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதால் இந்த முகாமினை வாகன ஓட்டிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!