2024ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி: விஜய்வசந்த் எம்.பி., பேட்டி

2024ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி: விஜய்வசந்த் எம்.பி., பேட்டி
X

செய்தியாளர்களை சந்தித்த விஜய்வசந்த் எம்பி.

வரும் 2024 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி என விஜய்வசந்த் எம்.பி., தெரிவித்துள்ளார்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் வீட்டு உபயோக விற்பனை நிலையத்தை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீட் தேர்வு வேண்டாம் என்பதை அனைவரும் ஒருமனதாக வலியுறுத்தி வருகிறோம். தமிழக முதல்வர் நிலையாக நின்று, நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. நீட் தேர்வு காரணமாக தன்னம்பிக்கை இழந்து மருத்துவம் படிக்க வேண்டாம் என்ற நிலைக்கு மாணவர்கள் மாறி வருகின்றனர் என்றார்.

ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மொழி என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விலை உயர்வு அதிகரித்து மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். மேலும் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்து அனைவரும் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே அணியில் திரண்டு வருவதாகவும், பாஜக ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை; வரும் 2024 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!