/* */

வாட்ஸ் அப்பில் புகார்: உடனடி நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி ஆணையர்

மக்களின் குறைகளை தொலைபேசி, வாட்ஸ்ஆப் மூலம் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் ஆணையருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்.

HIGHLIGHTS

வாட்ஸ் அப்பில் புகார்: உடனடி நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி ஆணையர்
X

சாக்கடை சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர். 

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் ராமலிங்கம் நகர், பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி, அபிராமி கார்டன் நகரில் வனம் அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். ராமலிங்கம் நகர், பாண்டியன் நகரில் 300 மீட்டர் நீளமுள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணியை விரைவில் முடித்திட வேண்டும் எனவும், மழைக்காலங்களில் சாக்கடை கால்வாயில் மழைநீர் தேங்கி சாலைகளில் வெளியேறி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தவிர்த்திட விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, இந்த பகுதியில் உள்ள அனைத்து சாக்கடை கால்வாய்களையும் தூர்வாரிட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

அதனை தொடர்ந்து அபிராமி நகர் கார்டன் பகுதியில் 20,000 சதுரடி பரப்பில் நகருக்குள் வனம் அமைக்கப்படவுள்ள இடத்தினை ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியை சார்ந்த வயதான முதியவர் ஒருவர் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பொது குடிநீர் குழாய் அமைத்து தரவேண்டும் என ஆணையாளரிடம் கோரிக்கை வைத்தார். பொது குடிநீர் குழாய் அமைத்து தர அவரிடம் உறுதி அளித்ததோடு, பொது குடிநீர் குழாய் அமைத்து தர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



Updated On: 7 Aug 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்