கோவை - நாகர்கோவில் சிறப்பு ரயில் ரத்து

கோவை - நாகர்கோவில் சிறப்பு ரயில் ரத்து
X

கோயமுத்தூர் - நாகர்கோவில் சிறப்பு ரயிலின் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை - திருநெல்வேலி மார்க்கத்தில் திருமங்கலம் துலுக்கப்பட்டிக்கு இடைப்பட்ட பகுதியில் இரட்டை வழிப்பாதை பணிகள் நடைபெறுகிறது. இதனால், இவ்வழித்தடத்தில் இயங்கும் சில சிறப்பு ரயில்கள் ஒரு பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாகர்கோவில் - கோயமுத்தூர் சிறப்பு ரயில் இன்று முதல் வரும் 13 ம் தேதி வரை 12 நாட்களுக்கு நாகர்கோவில் - மதுரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது .

மதுரையில் இருந்து கோவைக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது . மறுமார்க்கத்தில் கோவை - நாகர்கோவில் சிறப்பு ரயில் இன்று முதல் 13 ம் தேதி வரை மதுரை வரை மட்டும் இயக்கப்படுகிறது. மதுரை - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்