பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து CITU சார்பில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து CITU சார்பில் ஆர்ப்பாட்டம்
X

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து CITU சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை நாளுக்குநாள் நிர்ணயித்து தற்பொழுது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

அதன் ஒரு பகுதியாக புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் கொரனோ காலம் முடியும் வரை தொழிலாளர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும், தமிழகத்திற்கு தட்டுப்பாடின்றி தடுப்பூசி வழங்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழில் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். சாலைப்போக்குவரத்து மாவட்ட பொருளாளர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல்சேலம் மாவட்டத்தில் ஐந்துக்கு மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story