நான்கு மாதங்களுக்கு பிறகு வெளிமாநிலங்க ளுக்கு பேருந்து சேவை தொடக்கம்

நான்கு மாதங்களுக்கு பிறகு வெளிமாநிலங்க ளுக்கு பேருந்து சேவை தொடக்கம்
X

நான்கு மாதங்களுக்கு பிறகு சேலம் கோட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பேருந்து சேவை தொடங்கியது.

சேலம் கோட்டத்தில் இருந்து பெங்களூரு, மைசூரு, மாதேஸ்வரன் மலைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது

சேலம் கோட்டத்தில் இருந்து நான்கு மாதங்களுக்கு பிறகு வெளிமாநிலங்களுக்கு பேருந்து சேவை தொடக்கம்

கொரோனோவை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த நான்கு மாதங்களாக பேருந்து போக்குவரத்து வெளிமாநிலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று முதல் வெளி மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கியது. சேலம் கோட்டத்தில் இருந்து பெங்களூரு, மைசூரு, மாதேஸ்வரன் மலைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

முதற்கட்டமாக சேலத்திலிருந்து 150 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று முதல் இருபதுக்கு மேற்பட்ட பேருந்துகள் அரசு அறிவிக்கப்பட்ட பயணிகளுடன் பெங்களூருக்கு சென்றது. குறிப்பாக பேருந்துகளில் அனுமதிக்கப்படும் பயணிகள் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், கிருமிநாசினி கொண்டு கைகள் கழுவிய பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பயணிகளின் வசதிக்கு ஏற்ப பேருந்து எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!