சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சேலத்தில் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ரூ.62,000, முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.

சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு ரகசிய புகார் வந்துள்ளது.

அதன்பேரில் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு அதிரடி சோதனையில் இறங்கினர்.

அப்போது சார்பதிவாளர் இந்துமதி மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள மேஜை, பீரோ உள்ளிட்ட அலுவலகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத 62,000 ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!