/* */

எடப்பாடி முன்னிலையில் அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 13 பேர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

எடப்பாடி முன்னிலையில் அமமுக நிர்வாகிகள்  அதிமுகவில் ஐக்கியம்
X

அமமுக மாநில இளைஞரணி தலைவர் ஜோதிவாணன் உள்பட திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 13 பேர்,  எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 13 பேர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அமமுக மாநில இளைஞரணி தலைவர் ஜோதிவாணன், திருச்சி மாவட்ட அமமுக இளைஞரணி செயலாளர் பாலாஜி, மாவட்ட பேரவை தலைவர் ராஜா, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி தலைவர் பாபு, மாவட்ட அமைப்பு செயலாளர் சொக்கலிங்கம், மாநகர வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கௌசல்யா, நெசவாளர் அணி செயலாளர் சீனிவாசன் ஆகியோர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அதேபோல் திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை பகுதி செயலாளர் வேலு, பாலகரை பகுதி செயலாளர் கண்ணன், ஏர்போர்ட் பகுதி செயலாளர் நாகராஜ், 19வது வட்ட கழக செயலாளர்கள் கணேசன், 35வது வட்ட கழக செயலாளர் சரவணன் ஆகியோர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். புதியதாக அதிமுகவில் இணைந்தவர்களுக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 24 July 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி