விபத்து இல்லாத மாவட்டமாக மாற்றுவதே இலக்கு: சேலம் மாவட்ட ஆட்சியர்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் சேலம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலங்கள் சார்பாக நடைபெற்றது.
சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் சேலம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலங்கள் சார்பாக நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த பேருந்து, கார், ஆட்டோ ஓட்டுனர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குறிப்பாக சாலையில் வாகனங்களை இயக்கும்போது விபத்துகள் ஏற்படாதவாறு நிதானமாக ஓட்டுனர்கள் இயக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி முறையாக வாகனங்களை இயக்கினால் விபத்துக்களை தவிர்க்கலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பேசும்போது, சேலத்தில் ஒரு ஆண்டில் விபத்துகளில் 537 நபர்கள் உயிர் இழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு இல்லாத விபத்தாக 2083 விபத்துகள் சேலத்தில் நடைபெற்று உள்ளதாக கூறினார். குறிப்பாக மரணத்தில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும், வாகன விபத்தில் அர்த்தமற்ற மரணம் தேவையா? என்பதை மக்கள் யோசிக்க வேண்டும் என்றார். சேலம் மாவட்டம் விபத்தால் உயிரிழப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே இலக்கு என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu