சேலத்தில் தொடர்ந்து 10 நிமிடம் சிலம்பம் சுற்றி 4 வயது சிறுமி உலக சாதனை

சேலத்தில் தொடர்ந்து 10 நிமிடம் சிலம்பம் சுற்றி 4 வயது சிறுமி உலக சாதனை
X

சேலத்தில் தொடர்ந்து 10 நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 வயது சிறுமி.

சேலத்தில் தொடர்ந்து 10 நிமிடம் சிலம்பம் சுற்றி 4 வயது சிறுமி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.

சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் - திவ்யஸ்ரீ தம்பதியின் 4 வயது மகள் லக்க்ஷிதா. அப்பகுதியில் உள்ள யுகேஜி படித்து வரும் இந்த சிறுமிக்கு சிலம்பம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருந்ததால், 2 வயது முதல் முறைப்படி சிலம்பம் கற்று வந்துள்ளார்.

இந்தநிலையில், சிலம்ப கலையில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தொடர்ந்து 10 நிமிடம் சிலம்பம் சுற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்காக கடந்த 20 நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், இன்றைய தினம் சிறுமியின் சாதனை நிகழ்ச்சி அரங்கேறியது.

சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்ச்சிக்கு மருத்துவர் ராணி அறிவுக்கரசு மற்றும் நோபல் வோல்டு ரெக்கார்டு நிறுவனத்தினர் நடுவராக இருந்தனர்.

ஒற்றை நெடுங்கம்பு கொண்டு தனது சாதனை முயற்சியை தொடங்கிய சிறுமி சுவடு 1, 2, 4, ஒற்றை சுவடு, இரட்டை சுவடு, முக்கோன சுவடு என தான் பயின்ற சிலம்பு கலையை செய்து காட்டினார்.

தொடர்ந்து 10 நிமிடம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றியதால் சிறுமி லக்க்ஷிதாவின் சாதனையை நோபல் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து அதற்கான சான்றிதழை வழங்கியது.

Tags

Next Story