/* */

12 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம் வழியாக செல்லும் 12 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

12 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
X

சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில்வே பகுதிக்குட்பட்ட காசிபேட் - பல்கர்ஷா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் வழியாக செல்லும் கோவை - நிஜாமுதீன் சிறப்பு ரயில் வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் நிஜாமுதீன் - கோவை சிறப்பு ரயில் வருகிற 14 மற்றும் 21-ந் தேதிகளிலும், கோரக்பூர் - கொச்சிவேலி சிறப்பு ரயில் 11, 15, 16, 18, 22 மற்றும் 23-ந் தேதிகளிலும், மறுமார்க்கமாக செல்லும் கொச்சிவேலி - கோரக்பூர் சிறப்பு ரயில் 13, 14,18,20 மற்றும் 21-ந் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் பரோனி - எர்ணாகுளம் சிறப்பு ரயில் 12, 19 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் இருந்து செல்லும் எர்ணாகுளம் - பரோனி சிறப்பு ரயில் 16, 23 ஆகிய தேதிகளிலும், திருவனந்தபுரம் - நிஜாமுதீன் சிறப்பு ரயில் 13, 20 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக செல்லும் நிஜாமுதீன் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் 16, 23 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன. பராமரிப்பு பணிகள் காரணமாக மேற்கூறிய ரயில்கள் உள்பட சேலம் வழியாக செல்லும் 12 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Updated On: 10 April 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?