மார்ச் 15 ல் இரண்டு தொகுதிகள் காலி- ஹெச். ராஜா

மார்ச் 15 ல் இரண்டு தொகுதிகள் காலி- ஹெச். ராஜா
X

மார்ச் 15 ம் தேதி தமிழகத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் காலியாகும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்தார்.

பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை குழுவினர் சேலத்தில் ஜவுளி மற்றும் நெசவுத் தொழில் சார்ந்தவர்கள் இடையே கலந்துரையாடினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, ஊழல் குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு தகுதி இல்லை என்றும் திமுக ஒரு ஊழல் கட்சி என தந்தை பெரியாரே விமர்சித்து உள்ளார் என்றும் குறிப்பிட்டார்.2ஜி விவகாரத்தில் வரும் மார்ச் 15 ம் தேதி வரும் தீர்ப்பை சுட்டிக்காட்டி அன்றைய தினத்தில் தமிழகத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் காலியாகும் என்றார்.

சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் எந்த முயற்சியையும் பாஜக மேற்கொள்ளவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த அவர் சசிகலா ஒரு தனிகட்சியை சேர்ந்தவர் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் எவரேனும் இணைய விரும்பினால் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!