உரிய ஆவணங்கள் இல்லாத 14 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இல்லாத 14 லட்சம் பறிமுதல்
X

சேலத்தில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூபாய் 14 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

சேலம் சூரமங்கலம் வருவாய் வட்டார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும்படை அலுவலர்கள் தேர்தலையொட்டி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் இரும்பாலை சாலையில் வந்த கார் ஒன்றை நிறுத்தி அலுவலர்கள் சோதனை செய்ததில் அந்த காரில் 14 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் நெத்திமேடு பகுதியை சேர்ந்த எண்ணெய் ஆலை உரிமையாளர் கவின்ராஜ் அந்த பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு சென்றதாக கூறியுள்ளார்.இருப்பினும் கவின்ராஜ் கொண்டு வந்த தொகைக்கு உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் ரூ. 14 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story