டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்

டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்
X

தெருக்களில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள் 

சேலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் வீடுவீடாக கொசு மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்

மழைக்காலம் தொடங்க உள்ளதையொட்டி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குகு உட்பட்ட 4 மண்டலங்களிலும் தனி குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டு ஆங்காங்கே டெங்கு கொசு புழுக்கள் உள்ளதை கண்டறிந்து அங்கு கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனடிப்படையில் சேலம் சூரமங்கலம் மாநகராட்சி மண்டலத்திற்கு உட்பட்ட ராம் தியேட்டர் அந்தோணிபுரம் ஓடை, ஜாகிர் அம்மாபாளையம், ரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

சுகாதார ஆய்வாளர் பிரகாசம் தலைமையில் சுகாதார பணியாளர்கள் நீர்நிலைகள், கால்வாய்கள், ஓடைகள் மற்றும் சாக்கடை நீர் தேங்கி இருக்கும் பகுதிகளை கண்டறிந்து அங்கு கொசு புழுக்களை அழிக்கும் வகையில் மருந்து தெளிக்கப்பட்டது.

மேலும் தண்ணீர் தொட்டிகளிலும், குடிநீர் தொட்டிகளில் கொசு புழுக்களை அழிக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டது. இதேபோல் சேலம் மாநகராட்சிக்குபட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story