கோவை - லோக்மான்ய திலக் சிறப்பு ரயில் ரத்து

கோவை - லோக்மான்ய திலக் சிறப்பு ரயில் ரத்து
X

தண்டவாள பணிகள் காரணமாக கோயமுத்தூர் - லோக்மான்ய திலக் சிறப்பு ரயில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சூலூர் ரோடு - சோமனூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது.இதனால் இம்மார்க்கத்தில் இயங்கும் கோவை - மும்பை லோக்மான்ய திலக் சிறப்பு ரயில் இருமார்க்கத்திலும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு பகுதியாக கோவை - ஈரோடு இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

இதன்படி லோக்மான்ய திலக் - கோவை சிறப்பு ரயில், ஈரோடு - கோவை இடையே வரும் 13, 15, 16, 18, 20, 22, 23, 25, 27, 28, 29, 30, 31 ம் ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் கோவை - லோக்மான்ய திலக் சிறப்பு ரயில் கோவை - ஈரோடு இடையே வரும் 13, 15, 16, 18, 20, 22, 23, 25, 27, 28, 29, 30, 31 ம் ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!