தேர்தல் பணிக்காக சேலம் வந்த பாதுகாப்பு படையினர்

தேர்தல் பணிக்காக சேலம் வந்த பாதுகாப்பு படையினர்
X
ஒடிசா, பெங்களூரிலிருந்து எல்லை பாதுகாப்பு படையினர் 282 பேர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ரயில் மூலம் இன்று சேலத்திற்கு வந்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைசாவடிகளில் தேர்தல் பறக்கும் படையினருடன் மாவட்ட போலீசாரும் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாநகர் மற்றும் மாவட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 450 க்கும் மேற்பட்டவர்கள் ரயில் மூலம் வந்தனர்.

இந்த நிலையில் தேர்தல் பணிக்காக ஒடிசா, பெங்களூரிலிருந்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 282 பேர் சிறப்பு ரயில் மூலம் இன்று சேலம் ரயில் நிலையத்திற்கு வந்தனர். இவர்கள் பறக்கும் படையினருடன் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் வேட்பு மனு தாக்கல் நடக்கும் பகுதிகளிலும் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது