/* */

லாரி உரிமையாளர்கள் சங்கம்: வேலை நிறுத்த அறிவிப்பு

மத்திய அரசு டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், டீசல் மீதான மாநில அரசின் வரி விதிப்பை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தம்.

HIGHLIGHTS

லாரி உரிமையாளர்கள் சங்கம்: வேலை நிறுத்த அறிவிப்பு
X

வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சண்முகப்பா சேலத்தில் அறிவிப்பு. இதற்கு முன்பாக வரும் 26ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அலுவலகத்தில் தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சண்முகப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது,

மத்திய அரசு டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், டீசல் மீதான மாநில அரசின் வரி விதிப்பை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு மார்ச் 15 ஆம் தேதி முதற்கொண்டு காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வரும் 26 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து வரும் மார்ச் 5-ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட உள்ளது. மேலும் லாரி உரிமையாளர்கள் முன்வைத்துள்ள 8 கோரிக்கைகளுக்கு மத்திய அரசு தீர்வு காணும்வரை புதிய லாரிகள் வாங்குவதும் இல்லை, இயக்கப் போவதும் இல்லை என்றார். இதனால் தென் மாநிலத்தில் 26 லட்சம் வாகனங்கள் இயங்காது எனவும் கூறியுள்ளனர்.

Updated On: 18 Feb 2021 5:50 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?