முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்- ஒருவர் கைது

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்- ஒருவர் கைது
X

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சென்னை மற்றும் சேலம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வருகை தரவுள்ள நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டிலும், சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானது. சேலம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சேலம் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சோதனை முடிவில் வெடிபொருட்கள் ஏதும் கண்டெடுக்கப்படாத நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே தொலைபேசி எண்ணின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மிரட்டல் விடுத்தது தொடர்பாக திருப்பூரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.பிடிபட்ட நபரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் பரப்புரைக்காக முதல்வர் நாளை சேலத்திலிருந்து திருப்பூர் செல்ல உள்ள நிலையில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!