சேலத்தில் சசிகலாவிற்கு பிரம்மாண்ட போஸ்டர்
சேலம் மாநகர பகுதியில் சசிகலாவை வரவேற்கும் விதமாக சசிகலாவின் ஆதரவாளரான கலைவாணி என்ற தொண்டர் பிரம்மாண்ட போஸ்டர் ஒட்டி வரவேற்றுள்ளார். குறிப்பாக இந்த போஸ்டரில் தலைமைச் செயலகம் முன்பாக ஜெயலலிதா வெற்றி சுடரை சசிகலாவிடம் கொடுப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டரில் சசிகலாவின் ஆளுமையும் தலைமையும் அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத சக்தி..தியாகத் தலைவி லட்சிய சபதத்தை நிறைவேற்றி, மூன்றாவது முறையாக கழக ஆட்சி அமைப்போம், மூன்றாவது பெண் முதல்வர் திராவிடர் இயக்கத்தின் தலைவி சின்னம்மா தலைமையில் 2021 புதிய சரித்திரம் படைப்போம் என்றும், தமிழக உரிமைகளை பாதுகாத்திட, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றிட வருக,வருக, சின்னம்மா என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டரை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் வியந்து படித்தவாறு செல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu