சசிகலா விடுதலை- அமமுக கொண்டாட்டம்

சசிகலா விடுதலை-  அமமுக கொண்டாட்டம்
X

சசிகலா விடுதலை ஆனதையடுத்து சேலத்தில் அமமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து சசிகலா இன்று விடுதலையானார். அதை முன்னிட்டு சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர்,ஜெயலலிதா நினைவு மண்டபம் முன்பாக சசிகலாவின் ஆதரவாளர்களும், அமமுக நிர்வாகிகளும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!