தலைமுடியை கத்தரித்த கணவர்... தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தலைமுடியை கத்தரித்த கணவர்...  தூக்குப்போட்டு பெண் தற்கொலை
X
சேலத்தில், தலைமுடியை கணவர் வெட்டியதால் அவமானம் தாங்காமல், பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜபிரியன். இவரது மனைவி சுகந்தி. கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் ராஜபிரியன் வெளியில் சென்று விட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்தபோது, சுகந்தி தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது கத்தரிக்கோலால் மனைவியின் தலைமுடியை வெட்டினார்.
இதனால், திடுக்கிட்டு எழுந்த சுகந்தி, அவமானம் தாங்காமல் அழுதார்; பின்னர் வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதையடுத்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகந்தி பரிதாபமாக இறந்தார். கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜபிரியனை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்