கொரோனா பரிசோதனை செய்ய அலைமோதும் கூட்டம்

கொரோனா பரிசோதனை செய்ய அலைமோதும் கூட்டம்
X
கொரோனா பரிசோதனை செய்ய சேலம் அரசு மருத்துவமனையில் அலைமோதும் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ஒற்றை இலக்க எண்ணாக இருந்த கொரோனா தொற்று தற்போது இரட்டை சதமடித்து 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி திருவிழாவை நடத்தி ஆங்காங்கே தடுப்பூசி முகாம் அமைத்து தடுப்பூசி போட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம் அமைத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரனா பரிசோதனை செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் சமூக இடைவெளியோடு நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டு ஒவ்வொருவராக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வந்திருப்பது மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருவதாக இருந்தாலும், ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வந்ததால் அவர்களை சமாளிக்க முடியாமல் ஊழியர்கள் திணறும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசி போடுவதற்காக இன்று காலை அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்க்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தடுப்பூசியினை கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story