சேலத்தில் பெண்ணை தாக்கிய விஏஓ உதவியாளர்: 3 பேர் மீது வழக்கு
சேலம், அம்மாபேட்டை பச்சைப்பட்டியை சேர்ந்தவர் கோகிலா. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தனபால். இவர், உடையாப்பட்டி கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளராக உள்ளார். இவர்களுக்கு இடையே, வீட்டின் அருகே உள்ள 50 அடி நீளம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக புகாரின் பேரில், சர்வேயர் வந்து அளவீடு செய்து, கோகிலாவின் நிலம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம், பிரச்சினைக்குரிய நிலத்தில், கோகிலா துப்புரவு பணி செய்து கொண்டிருந்த போது , அங்கு வந்த விஏஓ உதவியாளர் தனபால், அவரது மனைவி தனலட்சுமி, தம்பி மனைவி கீதா ஆகியோர், கோகிலாவை திடீரென சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இந்த காட்சிகளை, கோகிலாவின் மகள் செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து படுகாயம் அடைந்த கோகிலா, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவத்தொடங்கியது. சென்னையில் உள்ள அதிகாரிகள் பார்த்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர். இந்த வீடியோவை அம்மாபேட்டை போலீசார், பார்த்து உடனடியாக கோகிலாவை வரவழைத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கோகிலா அளித்த புகாரின் அடிப்படையில், விஏஓ உதவியாளர் தனபால், அவரின் மனைவி தனலட்சுமி, கீதா ஆகியோர் மீது தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள 3 நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, தனபாலை பணியிடை நீக்கம் செய்து, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu