பல கோடி மதிப்பு நிலம் மீட்க நடவடிக்கை இல்லை: கலெக்டரிடம் திருநங்கை மனு
சேலம் கன்னங்குறிச்சி சின்னண்ணன் காடு பகுதியைச் சேர்ந்த திருநங்கை மாசியா உமா; இவர், உறவினர்களுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, தங்களை கருணை கொலை செய்ய வலியுறுத்தி புகார் அளித்தார்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கன்னங்குறிச்சி பகுதியில் சொந்தமான மூன்றரை ஏக்கர் பூர்வீக சொத்து உள்ளது . அதே பகுதியை சேர்ந்த மரமில் உரிமையாளர் மருதநாயகன், அவரது மகன் பாலசுப்பிரமணி, அசோக் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து, நிலத்தை அபகரித்துவிட்டனர்.
இதுகுறித்து, 10 ஆண்டுகளாக தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த ஜூன் மாதம் முப்பதாம் தேதி, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர்களுடம் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர்.
காவல்துறையில் புகார் அளித்ததும், மருதநாயகன் ஏராளமான ரவுடிகளுடன் வந்து என்னை, என் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எங்களால் நிம்மதியுடன் இருக்க முடியவில்லை. எங்களுடைய நிலத்தில் சுற்றிலும் சுவர்கள் எழுப்பி, மழைநீர் செல்ல முடியாமல் வீட்டிற்கு உள்ளேயே தேங்கி விடுவதால், வாழ முடியாமல் தவித்து வருகிறோம்.
போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்தவர் மீதும், உடந்தையாக இருக்கும் காவல்துறையினர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகள் மிரட்டுவதால், எங்களை கருணைக் கொலை செய்ய கலெக்டர் அனுமதிக்க வேண்டும் என்று, மனுவில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu