பயிற்சி செவிலியர் மாணவியருக்கே பாதுகாப்பு இல்லை

பயிற்சி செவிலியர் மாணவியருக்கே பாதுகாப்பு இல்லை
X
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி செவிலியர் மாணவியருக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என புகார்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் உட்பட 50 மாணவியர் நான்காம் ஆண்டு செவிலியர் படிப்பு பயின்று வருகின்றனர். இவர்களுக்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி வழங்கப்படுவது வழக்கம்.

தற்போது இவர்கள் கொரோனோ சிகிச்சை பிரிவில் பயிற்சி கால சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள செவிலியர் மாணவியர் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் முககவசம், கவச உடை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை என்றும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தை அணுகியும் உரிய நடவடிக்கை எடுக்காததால் நோய் தொற்று பரவும் நிலை உள்ளதாக மாணவியர் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது மட்டுமன்றி செவிலியர் மாணவியர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என்று கூறிவிட்டதால், அவர்களை தங்கள் விடுதியிலேயே தனிமைப்படுத்தி உள்ளதாகவும் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

உரிய பாதுகாப்பின்றி பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!