சேலத்தில் போதைப்பொருள் தயாரிக்கும் குடோன் கண்டுபிடிப்பு

சேலத்தில் போதைப்பொருள் தயாரிக்கும் குடோன்  கண்டுபிடிப்பு
X

சேலம் தாதகாப்பட்டி அருகே சண்முகா நகரில் செயல்பட்ட போதைப்பொருள் குடோன். 

சேலத்தில் போதைப்பொருள் தயாரிக்கும் குடோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் தாதகாப்பட்டி அருகே சண்முகா நகர் சாமுண்டி தெருவில் , பாலகார்த்திகேயன் என்பவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறிய பாக்கெட்டுகளில் புகையிலை தயாரித்து கடைகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார். இதனிடையே இவர், வேறுசில போதைப்பொருட்கள் தயாரிப்பதாகவும் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவன் தலைமையிலான குழுவினர் அந்த ஆலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த ஆலையில் தயாரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால் எந்தவிதமான போதைப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து முழுமையாக அறிய முடியவில்லை. அதேநேரத்தில் போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அரைத்த புகையிலை, பச்சைக் கற்பூரம், மென்தால், ஏலக்காய், பாக்கு தூள், சீவல், வாசனை வேதிப்பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 200 கிலோ அளவிலான இந்த பொருட்களின் மதிப்பு மூன்று லட்சம் ரூபாய் ஆகும்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். அதன் சோதனை முடிவுகள் கிடைத்த பிறகு, உரிமையாளர் மீது உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சேலத்தில் போதைப் பொருட்கள் தயாரிக்கும் குடோன் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai and business intelligence