சேலத்தில் திருடனை துரத்தி பிடித்த மாற்றுதிறனாளி ஆட்டோ ஓட்டுநருக்கு எஸ்.பி., வெகுமதி

திருடனை துரத்தி பிடித்த ஆட்டோ ஓட்டுநர் தங்கதுரையை பாராட்டி வெகுமதிகள் வழங்கிய சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ்.
சேலம் மாநகர் அம்மாபேட்டை காவல் நிலைய எல்லையில் நாமமலை அடிவாரம் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 28 ஆம் தேதி பஸ்சுக்காக நின்று கொண்டிருந்த நபரிடம் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பச்சபட்டியை சேர்ந்த பாஷா, பக்தவச்சலம் ஆகியோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சத்தம் போடவே அருகில் இருந்த மாற்றுதிறனாளியான ஆட்டோ ஓட்டுனர் தங்கதுரை ஆட்டோவில் துரத்தி ஆட்டோவை இருசக்கர வாகனத்தில் மோதி பொதுமக்கள் உதவியுடன் திருடர்களை கையும் களவுமாக பிடித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் இருவர் மீதும் கொண்டலாம்பட்டி மற்றும் அன்னதானப்பட்டி காவல் நிலையங்களில் ஏற்கனவே திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்து இரண்டு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் மாற்று திறனாளியாக இருந்தும் விடா முயற்ச்சியால் திருடனை விரட்டி பிடித்த ஆட்டோ ஓட்டுநர் தங்கதுரையை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து அவரை பாராட்டி வெகுமதிகள் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu